#BREAKING | மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் கோயில் கிணறு இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் படேல் நகரில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது இந்தூர் கோவிலில் இன்று படிக்கட்டு கிணறு மூடியிருந்த தடுப்பு இடிந்து விழுந்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தற்போது வரை, 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவத்தால் இதுவரை, 2 பெண்கள் உள்பட 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. ராமநவமியை முன்னிட்டு இன்று அதிகப்படியான பக்தர்கள் கோயலில் திரண்டிருந்த நிலையில் தளம் பாரம் தாங்கமுடியாமல் இடிந்து விழுந்தது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், கோயிலில் உள்ள சுவரை ஜேசிபி மூலம் உடைத்து பக்தர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது .