வலி நிவாரணிகளை ( Medicines ) மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்தகங்களுக்கு தமிழக காவல்துறை ஸ்ட்ரிக்டான எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக தலைவலி , காய்ச்சலுக்கு மருத்துவர்களிடம் செல்லாமல் நம் மக்கள் மேதாவிதமாக அருகில் இருக்கும் மருந்தகங்களுக்கு சென்று மருந்து மாத்திரை வாங்கி போட்டுக்கோலத்தை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள் அவ்வாறு மருந்து மாத்திரை சாப்பிடும் சிலருக்கு உண்மையில் குணமானாலும் பலருக்கு அது மேலும் பல சிக்கல்களை கொடுக்கின்றது.
நாளடைவில் இம்மாதிரியான சம்பவங்கள் அதிகம் அரங்கேற அது கடைசியில் மரணம் வரை சென்று முடிகிறது . இதன்காரணமாக மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் மருந்து மாத்திரைகள் ( Medicines ) கொடுக்க கூடாது என பல முறை துறை சார்ந்த அதிகாரிங்கள் அறிக்கைகளை விட்டும் அவ்வப்போது ஆய்வு நடத்தியும் வருகின்றார் ஆனாலும் இந்த சம்பவங்கள் நடந்துகொண்டே தான் இருக்கிறது .
அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகமாக இருப்பதால் வலி நிவாரணிகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்தகங்களுக்கு தமிழக காவல்துறை ஸ்ட்ரிக்டான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வகையில் மருந்து, மாத்திரைகள் பார்சலில் வந்தால் அது குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும் கொரியர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் பொதுமக்களும் மருத்துவர்களின் அறிவுறுத்தல் இல்லாமலும் மருந்து சீட்டுகள் இல்லாமலும் மருந்தகங்களில் மருந்துகளை வாங்க கூடாது என்றும் இதுகுறித்து ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.