இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து அத்தியவசிய பொருட்களில் விலை விண்ணை எட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இதன் எதிரொலியாக இலங்கையின் பிரதமா் மகிந்த ராஜபட்ச பதவி விலக வேண்டும் என கொழும்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கலவரமாக மாறியது. தொடர்ந்து, மகிந்த ஆதரவாளர்களுக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.
இதனால், உருவான வன்முறைகளில் 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட 7 பேர் பலியாகினர். மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டவர்களின் 35 ற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கு இரையாக்கப்பட்டன.
இதனை அடுத்து திடீா் திருப்பமாக, பிரதமா் மகிந்த ராஜபட்ச தனது பதவியை திங்கள்கிழமை ராஜினாமா செய்தாா். இதனைத் தொடர்ந்தும் இலங்கையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனாறல் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுடுவதற்கு முப்படைகளுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் நிகழும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக பெட்ரோலியம் கார்பரேஷன் அறிவித்துள்ளது.