மதுபானக்கடைகளை தவிர உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து, தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.
புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும், பலரும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர். இவர்கள் பொது இடங்களில் புகைப்டிப்பதால் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்டுகின்றன.
இந்த நிலையில் உணவங்களில் சாப்பிட வருபவர்கள் புகைப்பிடிக்கும் வகையில் அவர்களின் வசதிக்காக புகைப்பிடிக்கும் அறையானது (smokking room) அமைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பொது இடங்களில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட்டலும், ஓட்டல்களில் புகைப்பிடிக்கும் அறை அமைப்பது, புகைப்பிடிப்பதை ஊக்குவிப்பது போல் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தது.
அது மட்டும் இன்றி உணவு விடுதிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வருவதால் புகைப்பிடிக்கும் அறையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனையடுத்து உணவுக்கூடங்கள் உள்ளிட்ட எந்த இடத்திலும் புகைக்குழல் அறை திறக்க தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த நிலையில் அந்த சட்டத்தை தற்போது தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் சாராயம், மதுபானம் ஆகிய கடைகளை தவிர்த்து புகைக்குழல் கூடம் எங்கும் திறக்கப்பட கூடாது. அரசின் விதிமுறைகளை மீறியிருந்தால் புகைக்குழல் கூடத்தில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்யும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி உணவு விடுதிகளில் புகைக்குழல் கூடம் நடத்தினால் ஓராண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை இருபதாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தமிழக அரசு தெவித்துள்ளது.