ஞாயிறன்று முழு ஊரடங்கு நாளில் போட்டி, நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. கொரோனா வைரசின் முதல் இரண்டு அலைகள் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் தாகம் குறைவடைந்து, பாதிக்கபடுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை வீசத்தொடங்கி உள்ளது. இதனை அடுத்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை வித்திக்கத்தொடங்கி உள்ளது. மேலும் பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்தொடர்ச்சியாக உத்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி கல்லூரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
அதன்படி வார நாட்களில் இரவு நேர ஊடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி விடுமுறை உள்ளிட்ட பல பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்று கிழமைகளில் போட்டித் தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகளுக்கு செல்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் தேர்வுக்கு செல்பவர்கள் தேர்வுக்காண அனுமதி சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதத்தை காண்பித்து செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.