நெல்லை தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது.
நெல்லையில் கடந்த சில தினங்களுக்கு முன் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் காயம் அடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இழப்பீடு வழங்கிட உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது.
மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது.