இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம் செய்யப்பட்டு இந்தி மட்டுமே இருக்கிறது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியாதா? என்று எம் பி சு. வெங்கடேசன்( su-venkatesan) கேள்வியெழுப்பியுள்ளார்.
இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ், ஆங்கிலம் என அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றிருக்கும். இதனால் இந்தியா முழுவதிலும் அந்தந்த மாநில மக்கள் அவர்களுக்கு ஏற்ற மொழியை தேர்வு செய்து முன்பதிவு செய்துக் கொள்வார்கள். ஆங்கிலம் அல்லது ஹிந்தி தெரியாத மக்களுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் தற்போது இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் மொழி இடம்பெறாமல், ஹிந்தி மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், இன்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் தமிழ் நிறுத்தம்.இந்தி மட்டுமே இருக்கிறது.இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது.இதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார்?
இந்தியன் ஆயில் கார்பரேசன் அதிகாரிக்கு எம் பி சு. வெங்கடேசன் எம் பி கடிதம் எழுதியுள்ளார்.அதில்..
இன்டேன் தானியங்கி சமையல் எரி வாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கிலத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டிருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்தி சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப் போகிற மக்கள் என்னவென்றே புரியாமல் திகைத்து நிற்கிறார்கள்.
சமையல் எரிவாயு வேண்டுமென்றால் இந்தி கற்றுக் கொண்டு வா என்று மக்களை துரத்துவது போல உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா?
விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா? மீண்டும் இண்டேன் சமையல் எரிவாயு தானியங்கி பதிவு தமிழ் சேவையை தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.