அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பெயரில் அவசரச் சட்டம் நிறைவேற்றப் பட்டது .ஆனால் அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன்பு தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் வாசிங்டனில் உள்ள ஒரு மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது. இதனைப் பலர் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியால் இசை ரசிகர்கள் மீ து சரமாரியாகச் சுட்டான். இதனால் பொது மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உள்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் உயிர்ச் சேதம் ஏற்பட்டதா என்பது தொடர்பாக இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்