Elon Musk postpones India trip : உலகளவில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான ‘எக்ஸ்’ மற்றும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் கடந்த வரம் எலான் மஸ்க் இந்தியா வந்து பிரதமரைச் சந்திக்கத் திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஏப். 21 மற்றும் 22 தேதிகளில் இந்தியா வருவதாகத் தனது ஏக்ஸ் அறிவித்திருந்த அவர், திடீரென அந்த பயணத்தை ரத்து செய்தார்.
இந்தியா பயணத்தை ரத்து செய்தது குறித்து அவரை தனது ஏக்ஸ் பக்கத்தில் ‘டெஸ்லா நிறுவனம் தொடர்பான முக்கிய சந்திப்பு இருப்பதால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு தற்போது வர முடியவில்லை, ஆனால் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 28 அன்று எலான் மஸ்க் சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
எலக்ட்ரிக் வாகனச் சந்தையில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான சீனாவிற்கு அவர் பயணம் செய்துள்ளது, சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஆட்டோஷோ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகச் சீனா சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் சீன பிரதமர் லீ கியாங் மற்றும் எலான் மஸ்க் சந்திப்பில் டெஸ்லாநிறுவனத்தின் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளன..
மேலும் அவர் தானியங்கி கார்களுக்கான மென்பொருளைச் சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது.
சீனாவுடனான டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார்களுக்கான ஒப்பந்தத்திற்காக எலான் மஸ்க்கின்இந்த சீன பயணம் இருக்கும் என எதிர்ப்பாக்கப்படுகிறது Elon Musk postpones India trip.
இதையும் படிங்க : பாமக கோவை மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்!