ஏற்காட்டில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற மலர்கண்காட்சியில் சுமார் 72 ஆயிரத்து 387 பேர் மலர் கண்காட்சியை பார்த்து சென்றதாகவும் இதுவரையில் சுமார் ரூ.20 லட்சம் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கியது. ஏழைகளின் ஊட்டி என்ழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கோடைவிழா நடத்தப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு 45-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த மலர் கண்காட்சியில் 5 லட்சம் மலர்களைக் கொண்டு மலர் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மலர் கண்காட்சியில் அண்ணா பூங்காவில் பட்டாம்பூச்சி போல் வடிவமைக்கப்பட்டும், பேருந்து, மேட்டூர் அணை வள்ளூவர் கோட்டம் போன்ற உருவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் கோடை விழாவை காண சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வந்து செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கிய கோடை விழா நாளை வரையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற மலர்கண்காட்சியில் சுமார் 72 ஆயிரத்து 387 பேர் மலர் கண்காட்சியை பார்த்து சென்றதாகவும் இதுவரையில் சுமார் ரூ.20 லட்சம் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.