தன் வீட்டுப் பணிப்பெண்ணின் 9 வயது மகள் காணாமல் போய்விட்டதாகவும், அந்தச் சிறுமியை பார்த்தால் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு தான் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 சன்மானம் கொடுப்பதாகவும் நடிகை சன்னி லியோனி அறிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனி, குழந்தைகளை தத்தெடுப்பது, தொண்டு பணிகளில் ஈடுபடுவது முதலானவற்றில் சமூக அக்கறையுடன் ஈடுபட்டு வருபவர்.
இந்த நிலையில், அவரதுவீட்டில் பணிபுரியும் பணிப்பெண்ணின் மகள் காணாமல் போயுள்ளார். இதனால், அந்த சிறுமியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு, தான் தனிப்பட்ட முறையில் ரூ.50,000 கொடுப்பதாகவும் அறிவித்துள்ளார் சன்னி லியோனி.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“எனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணின் 9 வயது மகள் அனுஷ்கா கிரண் மோரேவை நேற்று மாலையில் இருந்து காணவில்லை. அந்தச் சிறுமியை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு தனிப்பட்ட முறையில் 50,000 ரூபாய் கொடுக்க தயாராக உள்ளேன்.
அனுஷ்கா கிரண் மோரேவை அவரின் பெற்றோர் தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை போலீஸை காவல் துறையை டேக் செய்து, அந்தச் சிறுமியின் புகைப்படத்தையும், அவருடைய பெற்றோரின் தகவலையும் பகிர்ந்திருக்கிறார். போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.