பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு பல்வேறு வசதிகளை செய்து தரும் நிலையில், அதில் முக்கியமான ஒன்றான சிறு சேமிப்பு திட்டத்தில் (savings scheme), தற்போது புதிதாக ஆதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது..
அதன்படி, தினமும் ரூ.50 முதலீடு செய்தால், முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் அருமையான அஞ்சலக சேமிப்பு திட்டம் (savings scheme) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, குறுகிய முதலீட்டின் மூலம் நல்ல லாபத்தை தரக்கூடிய போஸ்ட் ஆபீஸ் “கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம்” குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் மூலமாக தினமும் ரூபாய் 50 அதாவது, மாதம் ரூபாய் 1500 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தால் முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில், 19 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமகனும் சேர்ந்து பயன்பெற முடியும்.
மேலும், இந்த காப்பீட்டுத் தொகை திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரை சேமிக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல், இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பொழுது வாடிக்கையாளர்களுக்கு தேவையான கடன் வசதியையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பானது சிறுசேமிப்பு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த வரவேற்பையும், கூடுதல் நம்பிக்கையையும் அளித்துள்ளது.