இருதய பாதிப்பால் பிரபல தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை மூலம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது .
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
இருதய பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த தமிழக அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு இன்று காலை முதுநிலை ஆலோசகர் கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் மற்றும் அவரது குழுவினரால் இதய துடிப்பு, இதய தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு அவர்களுக்கு நான்கு பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டு கரோனரி ரிவாஸ்குலரைசேஷன் நிறுவப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை காலை 10 மணிக்கு நிறைவடைந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது . அறுவை சிகிச்சைக்குப் பின் இதயத் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலதரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழுவால் செந்தில் பாலாஜியின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .