சென்னையில் பூங்கா அருகே விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியதில் ( surgery ) படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கும் பூங்கா அருகே கடந்த 6 ஆம் தேதி 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது அங்கு இருந்த புகழேந்தி என்பவரின் வளர்ப்பு நாய் அந்த 5 வயது சிறுமியை நோக்கி வேகமாக ஓடி வந்து கடித்து குதறியுள்ளது.
Also Read : நெல்லை மக்கள் மீது தடியடி – கொதித்தெழுந்த தினகரன்..!!!
நாய்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் .
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் நாயின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த நாய்களுக்கு உரிய லைசன்ஸ் வாங்கவில்லை என்பது தெரியவந்தது .
இந்நிலையில் ராட்வீலர் நாய்கள் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை ( surgery ) வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் சிறுமி நலமுடன் இருப்பதாகவும், செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.