நடிகர் ஜூனியர் என்டிஆர்ருக்கு சமீபத்தில் எதிர்பாராத விதமாக கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடித்துள்ளார் . இந்த படத்தின் கிளிம்ப்ச் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும். இதனை அடுத்து அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.