பிரபல இயக்குனர் சுசி கணேசனின் மாமனாரும், முன்னாள் மாவட்ட ஆட்சியருமான சண்முகவேலு(85) உடல்நல குறைவு காரணமாக காலமானார்.
தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘5 ஸ்டார்’ படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகமான சுசி கணேசன், திருட்டுப்பயலே, திருட்டுப்பயலே 2, கந்தசாமி போன்ற படங்களை இயக்கினார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சுசி கணேசனின் மாமனாரும், முன்னாள் மாவட்ட ஆட்சியருமான சண்முகவேலு(85) உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். சண்முகவேலு கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
85 வயதாகும் இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். சுசி கணேசன் வீட்டில் ஏற்பட்டுள்ள மரணம், அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சண்முகவேலு திண்டுக்கல் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் இவரின் இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான காரைக்குடியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மறைவிற்கு பலரும் தங்களின் ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.