T20 உலகக்கோப்பை தொடரின் முக்கிய சுற்றான சூப்பர் 12 சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள அயர்லாந்து – ஆப்கனிஸ்தான் அணிகள் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதவிருந்தன.
அயர்லாந்து அணி இதுவரை நடந்த 2 போட்டியில் மொத்தமாக 1 வெற்றி 1 தோல்வி பெற்று 2 புள்ளிகள் பெற்றது. ஆனால் இதுவரை நடந்த 2 போட்டியில் 1 தோல்வி மற்றொரு போட்டி மழையால் ரத்தானதால் 1 புள்ளி வழங்கப்பட்டு 2 புள்ளிகள் பெற்றது ஆப்கனிஸ்தான்.
ஆனால் ஆட்டம் ஆரம்பமாகும் முன்பிலிருந்து மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர் மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்குவதாக நடுவர்கள் முடிவு செய்தனர். இதன் மூலம் 3 புள்ளிகள் பெற்று அயர்லாந்து பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு சென்றது. 2 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது ஆப்கனிஸ்தான்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் அடுத்து நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடப்பது கேள்விக்குரியாகியுள்ளது. இது போல தொடர்ந்து மழை குறுக்கிடுவதால் அணிகள் வெற்றி பெற்றால் கிடைக்கக்கூடிய 2 புள்ளியில் 1 புள்ளி மட்டுமே கிடைக்கும். ஒரு புள்ளியில் அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.