தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையான தமன்னா (tamanna bhatia) சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்துப் பேசிய போது,
எல்லாரையும் போல் தனது பெற்றோரும் தன்னை திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்துவதாகக் கூறி இருக்கிறார்.
நடிகை தமன்னா, குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கோலிவுட்டில் படு பிசியாக வலம் வந்த நிலையில், தற்போது பட வாய்ப்புக்காக ஏங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ஆனாலும், தமன்னா தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புஷ்பா 2 படத்தில் ஐட்டம் சாங்கில் ஆடவும் தமன்னா (tamanna bhatia) கமிட் ஆகி உள்ளாராம்.
புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஆடிய பாடல் வைரலாகி படு ஹிட்டானதோடு மட்டுமின்றி, அதற்குப் பிறகு அவரின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது விட்டது.
எனவே, அதேபோன்ற மேஜிக் தனக்கும் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் உள்ளாராம் தமன்னா.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து தமன்னா கூறுகையில், எல்லாரையும் போல் எனது பெற்றோரும் என்னைத் திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்துகிறார்கள்.
எனக்கும் கல்யாணம் பண்ணனும், குழந்தை பெத்துக்கனும்னு ஆசை இருக்கு. ஆனால், அது இப்பொழுது முடியாது எனக் கூறியுள்ளார்.
ஏனென்றால், தற்போதைய சூழ்நிலையில், தான் தனது சொந்த வாழ்க்கைக்காகக் கூட நேரம் ஒதுக்க முடியாத அளவு மும்மரமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும் அவர், சூட்டிங் லொகேஷனில் தான் தனது சந்தோஷமே இருக்கிறதென்றும், தன் பெற்றோரிடம் கூட பேச தனக்கு நேரம் இல்லை எனவும், இப்போதைக்குத் தனது கவனமெல்லாம் சினிமா மீது தான் என்றும் கூறியிருக்கிறார்.
இறுதியாக தமன்னா, தனது “திரைத்துறைப் பணியைச் சிறப்பாகச் செய்யப் பெற்றோர் மற்றும் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” எனவும் கூறி உள்ளார்.