தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கதாநாயகிகள் ஒருத்தராக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா.நடிகை தமன்னா தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி போன்ற பலமொழிகளில் நடித்து வருகிறார். பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக தமன்னா மாறினார்.
நடிகை தமன்னாவுடன் நடிப்பில் தற்போது பாபில் பவுன்சர் என திரைப்படம் ஒன்று வெளியாகி இருந்தது.இந்த திரைப்படத்தில் பவுன்சராக தமன்னா நடித்திருந்தார்.டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆன ஓடிடி தளத்தில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் தற்போது நடிகை தமன்னா மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவுடன் இணைந்து நவராத்திரி விழாவை கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.மேலும்,இந்த புகைப்படத்தில் நடிகை தமன்னாவுடன் பாஜக எம்.பி மனோஜ் கோடக்கும் இருந்திருக்கிறார்.இதனால் நடிகை தமன்னா பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
திரைபிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என அடுத்தடுத்து பாஜகவில் பலர் இணைந்து வரும் நிலையில் தற்போது நடிகை தமன்னாவும் பாஜகவில் இணையலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.தமன்னா தற்போது ஹிந்தி திரைபடங்கள் பலவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார்.