சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் அவதூறு வீடியோ பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாம்பரம் காவல் ஆணையர் ரவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல் ஆணையர் ரவி, “ஸ்ரீபெரும்புதூர் வரதராஜபுரத்தில் அடையாறு நீர்வழிப்பாதையில் இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த ஆஞ்சநேயர் கோவில் மட்டுமின்றி தேவாலயம் உள்ளிட்டவைகளையும் அகற்றப்பட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் மட்டும் இடிக்கப்படுவதாக அவதூறு வீடியோ பரவும் நிலையில் விளக்கம் அளித்துள்ள காவல் ஆணையர் ரவி, அவதூறு வீடியோ பரப்பியதாக இதுவரை 15 பேர் மீது மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.