பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல் நலக் குறைவால் ( UmaRamanan ) சென்னையில் காலமாகியுள்ளார்.
பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் தான் உமா ரமணன்.
முதல் படத்தியிலேயே இவர் குரல் மக்கள் மத்தியில் பிரபலமடைய ஏராளமான இசையமைப்பாளர்கள் இவரின் கால் சீட் நின்ற காலங்கள் இருந்தகாக கூறப்படுகிறது .
நிழல்கள், தில்லுமுல்லு, வைதேகி காத்திருந்தாள், திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பாடியுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது .
இந்நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த பாடகி உமா ரமணன் உடல்நலக்குறைவு காரணமாக காலமாகி உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
69 வயதாகும் பாடகி உமா ரமணன் கடந்த சில நாட்களாக உடனலக்குறைவால் அவதி பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்துள்ளது.
இசையுலகில் பல பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்த உமா ரமணன் ( UmaRamanan ) மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தவருகின்றனர்.