பாஜக இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைஇத்தேர்தல் தோல்வி மற்றும் பாஜக நிர்வாகிகளாக இருந்த சிஆர்டி நிர்மல் குமார், கண்ணன் உள்ளிட்டோர் 11 பேர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர் இந்த விவகாரம் தமிழக பாஜகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சென்னை அமைந்தகரையில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், தமிழநாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ,வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணி நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.
அதிமுகவுடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்” என்று பேசியதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுதியது.
இந்த விவகாரம் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டதை அடுத்துவானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் கூட்டத்தில் கருத்துக்களை முன்வைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இதற்கு பாஜக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இது போன்ற தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என தெரித்விதுள்ளார்.