நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றிAnnamalai thank தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடைபெறவிருக்கின்றது.
அதன் ஒரு பகுதியாக நேற்று ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்கள் அனைவரும் வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர்.
அதேபோல ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடிகளில் பதட்டமான சூழல் நிலவியதும் குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் பல்வேறு காரணங்களை முன்னிட்டு மக்கள் தேர்தலை புறக்கணித்த செய்திகளையும் நாம் கேட்டறிந்தோம்.
இதையும் படிங்க: நீலகிரியில் பாஜக 100% வெற்றி பெரும் – அடித்து சொன்ன எல்.முருகன்..!!!
தமிழகத்தை பொறுத்தவரை காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு மாலை 6 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,வாக்குப்பதிவின் போது ஊழல் திமுக அரசுக்கு எதிராக அனைத்து வயது வாக்காளர்களும் ஒன்றிணைந்துள்ளது தெரியவந்தாக குறிப்பிட்டுள்ளார். இண்டி கூட்டணியின் பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை தமிழக மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அரசியலில் தமிழக மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்தனர் என உறுதியாக நம்புவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.