இன்று முதல் அனைத்துத்துறை அலுவல்களையும் நேரடியாக கண்காணிக்கிறார் தமிழக முதல்வர்.

tamil-nadu-government-cm-dashboard-launch-today
tamil nadu government cm dashboard launch today

அரசின் அலுவல்களை முதலமைச்சர் அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் ‘சிஎம் டேஷ்போர்டு’ என்ற திட்டத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழக அரசில் உள்ள மக்கள் நல்வாழ்த்துறை, பள்ளிக்கல்வித்துறை என அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு 360 என துறை தொடங்கப்பட்டுள்ளது.
அந்த துறைகளின் அனைத்து அலுவல்களையும் முதலமைச்சர் தனது அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கும் வகையில் இந்த மின்னணு தகவல் பலகை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 360 என்ற தமிழ்நாடு அரசின் துறைசார்ந்த தகவல்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையிலும், திட்டங்கள், அறிவிப்புகளின் மீதான நடவடிக்கை குறித்து கண்காணிக்கவும் இந்த மின்னணு தகவல் பலகை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

tamil-nadu-government-cm-dashboard-launch-today
tamil nadu government cm dashboard launch today

மேலும், இன்று மாலை 6 மணிக்கு கொளத்தூரில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டான் அததொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

Total
0
Shares
Related Posts