தமிகத்தில் அதிகரிக்கும் ஒமைக்ரான் – சென்னையில் அதிக தொற்றாளர்கள்.

in-a-big-jump-33-more-omicron-cases-in-tamil-nadu
in a big jump 33 more omicron cases in tamil nadu

தமிகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

உலக நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ், டெல்டா, டெல்டா பிளஸ் என திரிபடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.  இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதோடு, கொரோனா தடுப்பூசிகளும் முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று அமெரிக்கா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ள நிலையில், இந்தியாவிலும் பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா பிளஸ் வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.

 in-a-big-jump-33-more-omicron-cases-in-tamil-nadu
in a big jump 33 more omicron cases in tamil nadu

மேலும் சென்னையில் மட்டும் 27 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 3வது இடத்தில உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 27 தொற்றாளர்கள், மதுரையில் 4 தொற்றாளர்கள் திருவண்ணாமலையில் 2 தொற்றாளர்கள், சேலத்தில் 1 தொற்றாளர் என மொத்தம் 34 ஒமைக்ரான் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Total
0
Shares
Related Posts