ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத இருந்த 8 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர் அதில் 2 பேரிடம் பேசி விட்டோம் 6 பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை இன்னும் ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சமூக பொறுப்பு நிதி மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், 10 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கியது.
இதனை சென்னை மாநகராட்சியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மகேஷ் குமாரிடம் வழங்கினார்.
மேலும் குறிஞ்சி இல்லத்தில் 2 மரக்கன்றுகளை நட்டு மேயருடன் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றினார்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,
சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சப்பை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் பங்களிப்போடு 10 ஆயிரம் மரங்களை சென்னை முழுவதும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மரம் நடுவது சுற்று சூழலை மேம்படுத்த உதவும் என்றும் இது போன்ற திட்டங்களை அரசு மட்டும் செயல்படுத்தினால் போதாது, மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத எட்டு தமிழர்கள் பற்றிய கேள்விக்கு, பதில் அளித்த அவர்,
நேற்று ஒடிசாவில் இருந்து கிளம்பும்போது எந்த தெளிவும் இல்லாமல் இருந்தது நேற்று இரவு இங்கே வந்து அரசு அதிகாரிகளிடம் பேசும் பொழுது அந்த 8 பேரும் பாதுகாப்பாக தான் உள்ளனர், அதில் 2 பேரிடம் பேசி விட்டோம், மற்ற ஆறு பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று உடன் பயணித்தவர்கள் சொல்லி உள்ளனர், அவர்கள் பயணம் செய்த பெட்டி எந்த பாதிப்பும் அடையவில்லை என்று தெரிந்துள்ளது.
அந்த 6 பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை இன்னும் ஓரிரு நாளில் தெளிவான பதில் கிடைக்கும். அதிகாரப்பூர்வமாக ஒடிசா விபத்தில் 275 பேர் பலியாகி உள்ளனர் என்று அந்த அரசு சொல்லி உள்ளது, நேற்று இரவு உரை 88 பேர் தான் அடையாளம் காணப்பட்டுள்ளது, இன்னும் இருக்கக்கூடிய 180 பேரை அடையாளம் காண முடியவில்லை என கூறினார்.
மேலும் பேசிய அவர் நாம் ஏற்பாடு செய்திருந்த இந்த கால் சென்டர்களில் அதிகப்படியான தொலைபேசி அழைப்புகள் வரவில்லை மொத்தமாக 11 அழைப்பு தான் வந்தது அவர்களும் குறிப்பிட்ட பெயரை சொல்லாமல் இது போன்று தெரிந்தவர்கள் அங்கு சென்றார்கள் என்று தான் தெரிவித்து இருந்தனர், குறிப்பிட்ட நபர்கள் தான் காணவில்லை என்று எந்த அழைப்பும் வரவில்லை கண்டிப்பாக அந்த 6 பெரும் பாதுகாப்புடன் இருப்பார்கள் விரைவில் ஆறுதல் தரும் வகையில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த 10 ஆயிரம் மரக்கன்றுகளை அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், பொது மக்கள் என அனைவரின் ஈடுபாட்டுடன் தான் சென்னை முழுவதும் நட உள்ளோம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார்.