அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, 10 மாவட்டங்களில் (10 districts) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், வரும் 22 ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்தது.
இதனையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னையில் ஓரிரு இடங்களிலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் (10 districts) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னதாக அடுத்த இரண்டு நாட்களுக்கும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், சில தினங்களுக்கு முன் வெப்ப அலை வீசி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் பூமி குளிர்ந்து அனல் பறக்கும் சென்னை சில்லென்ற சென்னையாக மாறியுள்ளது. கோடைக்காலம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.