புது தில்லியில் 25.04.2023 முதல் 28.04.2023 வரை நடைபெற்ற 2வது தேசிய செரிபிரல் பால்சி (Cerebral palsy) தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 02.06.2023 முதல் 04.06.2023 வரை நடைபெற்ற 2வது தேசிய செரிப்ரல் பால்சி (Cerebral palsy) கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட தடகள மற்றும் கால்பந்து வீரர்கள் 17 பேர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று (08.06.2023] சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார் .
ஜெர்மனியின் கொலொனில் ஜெர்மன் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் 30.07.2023 முதல் 05.08.2023 வரை நடைபெற உள்ள 8வது உலக அளவிலான குள்ள மனிதர்களுக்கான விளையாட்டுகள் போட்டியில் கலந்து கொள்ள உள்ள 3 – தமிழ்நாட்டு வீரர்களுக்கு நுழைவுக் கட்டணம், விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்துக் கட்டணம், விசா செலவுகள் மற்றும் சீருடை உள்ளிட்ட செலவினங்களுக்காக தலா ரூ.2,49,200/- மொத்த தொகை என ரூ.7,47,600/- க்கான காசோலையினை உதயநிதி ஸ்டாலின் பசுமை வழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இ.ஆப., ஆகியோர் உடன் இருந்தனர் .