skating : தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உயரிய ஊக்க தொகையாக ஏழரை இலட்சம் ரூபாய் பெற்று கோவை திரும்பிய ஸ்கேட்டிங் வீரர்கள் தமிழக அரசுக்கும் அமைச்சர் உதயநிதிக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவ,மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகறது.
இந்நிலையில் அண்மையில் சென்னையில் நடைபெற்ற, விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து செயல்பட்ட தமிழக வீரர்,வீராங்கனைகளுக்கு சுமார் 16 கோடி ரூபாய் ஊக்கத் தொகையை வழங்கினார்.
இதில் கோவையை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரர்கள் மூன்று பேருக்கு ஏழரை இலட்சம் ரூபாய் ஊக்க தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது .
இந்நிலையில் கோவை திரும்பிய மாணவர்கள் கவுதம்,ஆரவ்,தபஸ் பதி ஆகிய மூன்று மாணவர்களுக்கு பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
இதையடுத்து பேசிய வீரர்கள் கூறியதாவது :
கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து ஸ்கேட்டிங் விளையாட்டில் பதக்கங்கள் குவித்து வருவதாகவும், தமிழக அரசு வழங்கிய ஊக்க தொகை தேசிய சர்வதேச அளவில் இன்னும் சாதிக்க ஊக்கம் அளிப்பதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து,இந்தியாவின் முன்னால் ஸ்கேட்டிங் விளையாட்டு வீர்ரும் பயிற்சியாளரும் ஆன கனிஷ்கா தரணி குமார் கூறியதாவது :
தமிழக அரசு விளையாட்டு வீர்ர்களை ஊக்குவித்து வருவதாகவும், இதற்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
Also Read : https://itamiltv.com/tamil-nadu-is-full-of-drugs-edappadi-palaniswami-angry/
கோவையை பொறுத்த வரை இன்னும் சறுக்கல் விளையாட்டின் சில பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்க மைதானங்கள் தேவைப்படுவதாக கூறிய (skating) அவர்,இது போன்ற வசதிகள் இருந்தால் சர்வதேச அளவில் தமிழகத்தில் இருந்து ஸ்கேட்டிங் வீரர்கள் சாதிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார்..