இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகளின் மூலம் ஆண்டுக்கு 1.78 லட்சம் மரணங்கள் நடைபெறுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.78 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் . சாலை விபத்தில் உயிரிழப்போரில் 60% பேர் 18 முதல் 34 வயது உடையவர்கள்
இந்தியாவில் அதிக சாலை விபத்து நேரிடும் மாநிலமாக உத்தர பிரதேசம் (23,000 பேர்) முதலிடத்தில் உள்ளது.
Also Read : அடுத்த மாதம் முதல் புறநகர் ரயில்களில் ஏசி பெட்டிகள்
ஆண்டுக்கு 10.6% (18,000 பேர்) சாலை விபத்துகளுடன் நாட்டில் 2ஆவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
சாலை விபத்துகளில் 3ஆவது இடத்தில் மகாராஷ்டிரா, 4ஆவது இடத்தில் மத்திய பிரதேசம் உள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக வலம் வரும் இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் நிலையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மத்திய அரசியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் இந்த ஆண்டு சாலை விபத்துகளின் மூலம் 1.78 லட்சம் மரணங்கள் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.