தூர்தர்ஷன்: மத்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் லோகோ வண்ணம் மாற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், பிரசார் பாரதி தலைமைச் செயலதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
தூர்தர்ஷன் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிடி நியூஸ் தொலைக்காட்சியின் லோகோ சிவப்பு வண்ணத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் சாடின.
தூர்தர்ஷன்தேர்தலில் வாக்குகளை கவரவும், அரசு நிறுவனங்களை கைப்பற்றவும் பாஜக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக விமர்சித்தனர்.
இதையும் படிங்க: “அனைத்தையும் காவிமயமாக்க பாஜக சதி” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தூர்தர்ஷன் பிரசார் பாரதியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலரான ஜவஹர் சிர்காரும் லோகோ வண்ணம் மாற்றப்பட்டது வேதனையளிப்பதாக தெரிவித்திருந்தார்.
தூர்தர்ஷன் இந்நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள பிரசார் பாரதியின் தலைமைச் செயல் அலுவலர் கவுரவ் திவேதி, தூர்தர்ஷன் லோகோவின் வண்ணத்தை பாஜகவுடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறானது என்றும்,
தூர்தர்ஷன் அது காவி நிறமல்ல, ஆரஞ்சு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.