அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை (southwest monsoon) தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை (southwest monsoon) இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக, மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல் ஆகிய பகுதிகளில் 27.05.23 (வெள்ளிக்கிழமை) முதல் 29.05.23 (ஞாயிற்றுக்கிழமை) வரை மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக் கூடும்.
மேலும், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.