‘திராவிட மாடல் காலாவதியான கொள்கை’ என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையிலிருந்து வெளியேறியது ஏன் குறித்து ஆங்கில நாளிதலுக்கு பேட்டியளித்துள்ளார்.அதில் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம், கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மீதான தாக்குதல், மற்றும் மாணவி மரணம், சமீபத்தில் நடந்த தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் கொலை உள்ளிட்ட சம்பவங்களை மையப்படுத்தி பேசி இருந்தார்.
முன்னதாக தமிழ்நாட்டிற்கு பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்தப்படுவதாக மத்திய உளவுத்துறை எச்சரித்தது. தற்போது தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில்,தமிழ்நாடு எப்படி அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று கூற முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானதாக சித்தரிக்கப்பட்டது தான் திராவிட மாடல் வாசகம்.இது சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுவதே திராவிட மாடல் என்ற முழக்கம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் வெளிநடப்பு செய்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,சமூகநீ்தி,சுயமரியாதை,அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்,பெண்ணுரிமை,மதநல்லிணக்கம்,பல்லுயிர் ஓம்புதல்,பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராசர்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர்,திராவிட மாடல் ஆட்சி,தமிழ்நாடு அமைதிப் பூங்கா,சில பகுதிகளை நீக்கிவிட்டு வாசித்ததாகக் கூறினார்.
பின்னர் தனது உரைக்கு பிறகு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பதற்காக அவையில் காத்திருந்ததாகவும், ஆனால், சபாநாயகருடன் ரகசியமாக பேசி முதலமைச்சர் தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.இதன்காரணமாக தான் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இருந்து பாதியில் வெளியேறியதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.