அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் (christmas) பெருவிழா நிகழ்ச்சி 18.12.2023 – திங்கட் கிழமை அன்று நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கிறிஸ்தவப் பெருமக்களை கௌரவிக்கும் விதமாக, கழகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கழகத்தின் சார்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்” திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், வருகின்ற 18.12.2023 -திங்கட் கிழமை மாலை 5 மணியளவில், சென்னை, வானகரம், ஜீசஸ் கால்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் கிறிஸ்துமஸ் (christmas) பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்னார்கள்.
இந்நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவப் பெருமக்களும் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.