தமிழ்நாட்டின் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவுக்கு சங்கர் மீது அவதூறு வழக்கு போடுவதற்காக வேகமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் 19 உயிர்கள் பலியாகியிருக்கின்றனர். முப்பதுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் களத்திற்கே சென்று துரித நடவடிக்கையில் ஈடுபட்ட நேரத்தில்,
தமிழ்நாட்டின் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சவுக்கு சங்கர் மீது அவதூறு வழக்கு போடுவதற்காக வேகமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு சென்ற சம்பவம் குறித்து உயிர்பலியை விட இது என்ன பெரிய பிரச்சனையா என சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து ,ஒரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு போட, மறுபக்கம் உன்னுடைய அமைச்சர் பதவியை காலி பண்ணுற பாரு என்று சவுக்கு சங்கர் சவால் விட மாறி மாறி மோதி கொண்டு இருக்கின்றனர்.
மேலும் சவுக்கு சங்கர் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பாக பேசி வருவதாக அடுக்கடுக்காய் குற்றசாட்டுகளை முன்வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாபேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 4 அவதூறு வழக்குக்குகளை தாக்கல் செய்தார்.
ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளைப் பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில், தொடர்ந்து அவதூறு பரப்புவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்குப் போடப்பட்டதிலிருந்து சவுக்கு சங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதில் டாஸ்மார்க் பேட்டிக்கு ”அவதூறு வழக்கு ஏன் போடல.. அமைச்சர் செந்தில் பாலாஜி எனக்குத் தகவல் கொடுத்த வரை டாஸ்மார்க் கூப்பிட்டு மிரட்டினாரா என்ன அர்த்தம்? எனக்குத் தகவல் கொடுத்தால் பதவிநீக்கம் பண்ணிடுவீங்களா? பண்ணுங்கள் பார்ப்போம் மந்திரி பதவி காலி பண்றேன். பார்ப்போம்? என்று சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் யாருக்குச் சிறை போறாங்கன்னு பார்ப்போமா.. என்னும் கேட்டு உள்ளார். தொடர்ந்து செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு, கள்ளச்சாராயம் சம்பவம், டாஸ்மாக் பொது மேலாளர் ராம துரைமுருகன் வழக்கு உள்ளிட்ட அடுத்தடுத்து சர்ச்சை டிவிட்களை சவுக்கு சங்கர் பதிவிட்டு வருகிறார்.
இந்த டிவிட்களுக்கு எல்லாம் செந்தில் பாலாஜி பதில் தரப் போகிறாரா..? அல்லது இதனைக் கண்டு கொள்ளாமல் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட போகிறாரா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்