உறுப்பு தானம் செய்பவர்களின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்(tamilisai soundararajan) பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒய் 20″மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் பங்கேற்று மாநாட்டை துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
தொழில் துறையில் இந்தியா எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான மாநாடு இது எனவும் பலத்துறைகளில் இந்தியா முன்னேறி வரும் நிலையில் ஜி 20 மாநாட்டை நடத்தி உலகிற்கு வழிகாட்டி வருகிறோம் என தெரிவித்தார்.
புதுச்சேரியில் 10% இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இட ஒதுக்கீடு இல்லாமல் மாணவர்கள் அடுத்த முறை 10% தாண்டி அதிக மாணவர்களுக்கு மருத்துவ குணம் கிடைக்கும் இடம் கிடைக்க நாம் வழி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்த கேள்விக்கு ,உடல் உறுப்பு தானம் செய்வதற்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு பாராட்டுக்குரியது எனவும் உறுப்பு தானத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன் அதேவேளையில் உறுப்பு தானத்திற்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
உறுப்பு தானத்திற்கு பிறகு வரும் சட்டரீதியான பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுப்பதுடன் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்குவிப்பதற்கு ஏதேனும் நிதி உதவிகளை ழெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.