2022-23-ம் நிதியாண்டில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தன மரம், , தேக்கு போன்ற மதிப்பு மிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்றும் புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசுகள் வழங்கப்படும் என்றும கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் இயற்கை வேளாண்மை பொருள் ஏற்றுமதி, புதிய உள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசுகள் அளித்தும் பாராட்டியும் மகிழும் வீடுகள்தோறும் இலவசம்என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் காடுகள் மழையை ஈர்க்கும் இயற்கை காந்தங்கள். பூமியை குளிர்விக்கும் மரதக குட்டைகள். சாகுபடிகள் தமிழ்நாட்டில் வேளாண் காடுகளை உருவாக்கி வன பரப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் பருவநிலை மாற்றங்களை தாங்கி விவசாயிகளுக்கு நிரந்தர வைப்புத் தொகையாக எதிர் காலத்தில் நல்ல வருமானத்தை தரும் மரம் வளர்ப்பு ஊக்குவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
2022-23-ம் நிதியாண்டில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனமரம், மகா கனி, தேக்கு போன்ற மதிப்பு மிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கி மரம் சார்ந்த விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்றும் இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.