தமிழக பட்ஜெட்டில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூபாய் 1000 வழங்குவதற்கான திட்டம் (housewives 1000 rupees scheme) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 7000 கோடியை கணக்கிட்டு பார்த்தால், கிட்டத்தட்ட 50 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மாதம் 1000 ரூபாய் வீதம் 12 மாதங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு மட்டும்தான் இந்த உரிமை தொகை (housewives 1000 rupees scheme) வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வருமான வரி செலுத்தாத குடும்பங்கள், மேலும் மத்திய மாநில அரசு பணியில் இல்லாத குடும்பங்கள் மற்றும் கணவன்மார்கள் 15,000 க்கு மேல் சம்பளம் வாங்காத குடும்பங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்காத குடும்பங்களை மட்டும் தெரிவு செய்து இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அன்று அண்ணாதுரை அவர்களின் பிறந்தநாளன்று முதலமைச்சர் துவங்கி வைப்பார் என்றும் பட்ஜெட்டில் தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.