மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் திருநெல்வேலி மாவட்டத்தில் காலியாகவுள்ள 02 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடத்தப்படவுள்ளது.
மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடிப்பு. வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும். மற்றும் மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மிகவும் பிறபடுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர் வயது வரம்பு 18 முதல் 34 வரையும், பிற்படுத்தப்பட்டோர் பெண்கள் ஆதரவற்ற விதவை முன்னுரிமையற்றவர் வயது வரம்பு 18 முதல் 34 வரையும் விண்ணப்பிக்கலாம்
மொத்தமாக உள்ள 02 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 20.07.2022 அன்று மாலை 5.00 கடைசி நாள். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் சம்பள விகிதம் ரூ.15900 – 50400 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 2 பணியிடங்களுக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை,
உதவி இயக்குநர்,
மணிமுத்தாறு,
அம்பாசமுத்திரம் தாலுகா,
திருநெல்வேலி – 627421,
போன் 04634 – 290807.
என்ற முகவரியில் 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.