அமைச்சராக உள்ள ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விடுத்துள்ளார்.
சென்னையில் 2.9.2023 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, டெங்கு, மலேரியாவை நாம் எதிர்க்க முடியாது. அதை ஒழிக்கத்தான் முடியும். அதேபோல, சனாதனத்தையும் நாம் அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.
உதயநிதி இந்த பேச்சுக்கு இந்து மக்களை படுகொலை செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார் என வட மாநிலங்களில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதால்,நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த சம்பவத்திற்கு உதயநிதியின் மீது கொலை மிரட்டல், வழக்கு பதிவு மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர்சுப்ரமணியன் சுவாமி, சனாதன தர்மத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குத் தொடர ஆளுநரிடம் அனுமதி கோரியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆளுநரிடம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, அளித்த புகாரில்,
உதயநிதியின் பேச்சும், சனாதன தர்மத்திற்கு எதிரான வெறுப்புப் பேச்சு பல கோடி மக்கள் மனதை புண்படுத்தி ,சனாதன தர்ம சமூகத்தில் அச்சச் சூழலை உருவாக்கியுள்ளது.
மேலும் சனாதன தர்மத்தின் நம்பிக்கையாளர்களிடையே அச்சம், பீதி, அச்சுறுத்தல், பாதுகாப்பின்மை போன்ற அதிர்ச்சிகரமான சூழலை உருவாக்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஒரே மாதிரியாகக் கருதி களங்கப்படுத்துவது ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில்,நீதிமன்றம் வழக்குத் தொடர அனுமதி வழங்குவதற்கான கொள்கைகளை விளக்கியுள்ளது. எனவே, பொது அமைதிக்கு எதிராக, நீதியின் நலன் கருதி, உங்கள் அரசியலமைப்புச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 இன் பிரிவு 196ன் கீழ் இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B, 295A, 298, மற்றும் 505 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அமைச்சராக உள்ள ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை கலைக்க நடவடிக்கை எடுக்கபடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.