இன்றைய காலக்கட்டத்தில் பல வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் செய்யும் சேட்டைகள், வியக்க வைக்கும் திறமைகள்,நடனங்கள் ,பாடல்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த மாதிரியான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டால் உடனே ட்ரெண்டாகிறது.அந்த வகையில் சித்திரை கோடையிலே சிறந்த நல்ல நுங்காவேன்… பனையின் பெருமையும் பாட்டியின் பாடலும்… ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்தின் மாநில மரமும்,தமிழின் பெருமையை ஓலைச் சுவடிகள் மூலம் உலகிற்கு தந்த பனை குறித்த பெருமைகளை வாய் பாட்டு மூலம் மூதாட்டி ஒருவர் எடுத்துச் சொல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த காணொளியில் பனைமரம் தனது பயன்களை கூறுவது போல வாய்ப்பாடு மூலம் இந்த பாட்டி பனை மரத்தின் பெருமைகளை விளக்குகிறார்.இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.