vijayakanth :தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு மார்பளவு சிலையை அமைத்த கட்சி நிர்வாகிகள் மொட்டை அடித்து ஈமச்சடங்கு செய்து அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும்,தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார்.
தன் ஒவ்வொரு செயலிலும் மனிதநேயத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.தமிழ்நாட்டு அரசியல் வெளியில் புதுத்திசையிலான நம்பிக்கையை உருவாக்கியவர் விஜயகாந்த்.
அவருக்கு ,முதுகு தண்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 8 வருடமாக வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டது.
டிசம்பர் 27-ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 28 ஆம் தேதி காலை 6:10 மணிக்கு உயிரிழந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மேலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து,
விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் ஏராளமானோர் இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொண்டனர்.
கேப்டன் விஜயகாந்த்(vijayakanth) மறைவையொட்டி , தமிழ்நாட்டின் அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு ஈமச்சடங்குகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்று பகுதி அருகே தேமுதிக மாநில அவைத்தலைவர் இளங்கோவன் தலைமையில்,
Also Read :https://x.com/ITamilTVNews/status/1744607027266273626?s=20
சுமார் 100க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களும் ,நிர்வாகிகளும் மொட்டை அடித்து கேப்டன் விஜயகாந்த்திற்கு ஈமச்சடங்கு நடைபெற்றது.
அப்போது ஆற்றங்கரையில் நடைபெற்ற ஈமச்சடங்கின் போது, மூன்று கருடன்கள் வலம் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்வை கண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், “கேப்டன் வாழ்க, கேப்டன் விஜயகாந்த் வாழ்க” என்று கோசம் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, மாநில அவைத்தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு முதன்முதலாக திருவுருவச்சிலை திறக்கப்பட்டது.
பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டனர் .
மேலும் தற்பொழுது விஜயகாந்த் இறந்த போது, நேரில் வந்து அஞ்சலி செலுத்தமுடியாத ரசிகர்களும் பிரபலங்களும் அவரது சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி விட்டு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.