நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் ,தருமபுரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (மே 8) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை (மே 9) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, ஈரோடுஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: தி.மு.க. அரசின் மூன்றாண்டு கால ஆட்சி.. சாதனை அல்ல வேதனை – எடப்பாடி பழனிசாமி!
மே 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 12 மற்றும் 13ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரை4 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 35.6 டிகிரி பாரன்ஹீட் வரைபடிப்படியாக குறையும். மே 8 முதல் 11ஆம் தேதி வரை உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 37.4 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று முதல் வரும் 11 ஆம் தேதி வரைகாற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 40-55 சதவீதமாகவும் மற்ற நேரங்களில் 50-85 சதவீதமாகவும் கடலோரப்பகுதிகளில் 55-85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.