டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப் பிரியர்கள்

Tasmac-stores-as-tomorrow-is-a-full-curfew
Tasmac-stores-as-tomorrow-is-a-full-curfew

நாளை தமிழகம் முழுக்க முழு ஊரடங்கு என்பதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படவுள்ளன. இதன் காரணமாக இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் 5,600 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஒரு நாள் ஒன்றுக்கு 70 லிருந்து 80 கோடி ரூபாய் வரை வியாபார நடைபெறும். வார இறுதிநாட்களில் 100 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனை நடைபெறும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்து வருகிறது. இதன்படி, 1 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கை பதிவாகி உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதோடு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்படவுள்ளன. இதன் காரணமாக இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Tasmac-stores-as-tomorrow-is-a-full-curfew-
Tasmac store as tomorrow is a full curfew

இந்நிலையில், இன்று மதுபான கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. அப்படி, கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க வைப்பதோடு டோக்கன் முறையில் மது விற்பனை செய்யவும் முடிவுசெய்து இருகின்றனர்.

Total
0
Shares
Related Posts