அமெரிக்காவில், பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட்டின் (taylor swift) இசை நிகழ்ச்சி 2.3 ரிக்டர் பூகம்பம் போன்ற தாக்கத்தை ஏற்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்க்கு (taylor swift) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள லுமென் பீல்ட் மைதானத்தில் ஸ்விப்டின் இசைக்கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் 1 லட்சத்து 44 ஆயிரம் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த இசை நிகழ்ச்சியின் போது பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் பாடலுக்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக நடனமாடியபோது உள்ளூரில் 2.3 அளவிலான நிலநடுக்கத்திற்கு சமமான நில அதிர்வு ஏற்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நில அதிர்விற்கும் ‘ஸ்விப்டி நிலநடுக்கம்’ என பெயர் வைத்துள்ளனர். இந்த நிலநடுக்கம் சில மணி நேரம் நீடித்ததாக நில அதிர்வு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இந்த நில அதிர்வு சரியான ஆதாரம் இல்லாத ஒன்றாக தான் உள்ளது என்றாலும், இசை நிகழ்ச்சியில் பயன்படுத்தபட்ட சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள், ரசிகர்களின் அலறல் மற்றும் குதித்து ஆடிய நடனத்தின் விளைவாக இந்த அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனால், பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட்டின் இசைக்கச்சேரி சியாட்டிலின் இசை வரலாற்றில் ஒரு அழியாத முத்திரையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், தான் ஏற்படுத்திய இந்த நில அதிர்வு குறித்து அறியாத ஸ்விப்ட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரவாரம், செய்து நடனமாடிய ரசிகர்களுக்கு தனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்து உள்ளார்.