வரும் நாடுமன்ற தேர்தலில் வேட்பாளராக தனக்கு சீட் கொடுக்கவில்லை என்று ஆதாரவாளர்கள் முன் தெலங்கானா முன்னாள் முதல்வர் தட்டிகொண்ட ராஜய்யா கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா(telangana) மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ், பாஜக ,பாரத் ராஷ்டிர சமிதி’ (BRS), ‘தெலங்கானா சாசன சபா’, உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குக்காக தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில் தெலங்கானாவில் 119 சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளாரை பிஆர்எஸ் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான கே சந்திரசேகர் ராவ் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது .
அதன்படி 115 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். இவர் அறிவித்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 7 பேர் புதிதாக போட்டியிருக்கின்றனர்.
இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தனது கான்பூர் தொகுதியில் வேறொரு வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தார். அதன்படி கான்பூர் தொகுதியில் ராஜய்யாவிற்கு பதிலாக மற்றொரு மூத்த தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு கட்சி சீட்டு கிடைக்கவில்லை என்ற தகவல் ராஜையா அறிந்ததும் தனது தொகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை கீழே விழுந்து அழுதார். இதனால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமூட்டும் விதமாக ஜெய் ராஜய்யா, ஜெய் தெலுங்கானா என முழக்கங்களை எழுப்பினர்.
முழக்கங்களுக்கு மத்தியில், அவர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் முன் மீண்டும் மீண்டும் கதறி அழுதார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.