நடந்து வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் மீதமிருப்பது தெலங்கானா மாநிலம் தான். அந்த வகையில், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் ஆளும் BRS மற்றும் ஒரு பெரும்பான்மையை பிடிக்க போராடும் BJP-க்கு அதிர்ச்சி தர்ற முடிவுகள் பெரும்பான்மையா வெளியாகி வருகிறது. அந்த கருத்து கணிப்பு முடிவுகள் என்ன? தெலங்கானா மக்கள் யாருக்கு வாய்ப்பளிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது… அது நாடாளுமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? பார்க்கலாம் விரிவாக…
மிசோரம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்களாள் ஒரு பக்கம் சொல்லப்படும் நிலையில், தற்போது அதில் 4 மாநில தேர்தல்கள் முடிந்துள்ளது. மீதமிருக்கும் மாநிலம் தெலங்கானா! இந்த 5 மாநிலங்களில் சில அரசியல் சூழல்களால் ஒரு வகையில் கூர்ந்து கவனிக்கப்படுவது தெலங்கானா.
தெலுங்கானாவை பொறுத்தவரை, மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் தற்போதைய தேர்தலில், ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி 119 தொதிகள்ளிலும் போட்டியிடுது… காங்கிரஸ் கட்சி ‘கோத்தகோடா’ என்ற ஒரு தொகுதியை விட்டுட்டு மீதமிருக்க 118 தொகுதிகள்ல போட்டியிடுகிறது. அதுவே பாரதிய ஜனதா கட்சி 9 தொகுதிகள ஜன சேனா கட்சிக்கு ஒதுக்கீட்டு 111 தோதிகள்ளில் போட்டியிடுகிறார்கள். கூடவே, ஓவைசியின் MIM கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். மற்ற இடங்களில் ஆளும் BRS கட்சிக்கு ஆதரவு என்று கூறியுள்ளார்கள். மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 4798 வேட்பாளர்கள் போட்டியிடுறார்கள். இப்படியாக பிரதான கட்சிகள் போட்டியிடும் இடங்களின் நிலை இருக்கிறது.
தெலங்கானா தேர்தலில் யார் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்று கடந்த சில மாதங்களாவே பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன் சொல்லப்பட்டது, ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், பாஜகவிற்கும் தான் கடும் போட்டி நிலவும் என்பது தான். ஆனால், தற்போது களம் மாறி உள்ளது. தேர்தலை ஒட்டிய தற்போதைய நிலவரம் பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதோடு ஆளும் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. காரணம், அங்கு வெற்றி வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது தான். இந்த கருத்துக்கணிப்பில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு அமைப்புகள் மற்றும் தேசிய ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்புகளில் சொல்லப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் காங்கிரஸ்-க்கு வெற்றி வாய்ப்பு என்பது சொல்லப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல்களில் பலிக்காது என்று ஒருபுறம் சிலர் சொன்னாலும், அதை அப்படியே கடந்து போய் விடவும் முடியாது தற்போதைய சூழலில். ஏனென்றால், தேசிய அளவில் பாஜகவும் 10 ஆண்டுகள் ஆட்சில் உள்ளது. பாஜக சற்றும் எதிர்பார்க்காத வகையில் இந்தியா கூட்டணி வலுவாக அமைந்துள்ளது.
தெலங்கானா தேர்தல் வரும் நவ.30 ஆம் தேதி நடக்க உள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. பொறுத்திருந்து பார்க்கலாம் 5 மாநில தேர்தல் முடிவுகளை… கணிக்கலாம் நாடாளுமன்ற தேர்தல் நிலவரத்தை…