நாளை முதல் பெண்கள், திருநங்கைகள் அனைவரும் அரசுப் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் இல்லை என தெலங்கானா மாநில அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இதனை தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் கட்சி கூறியிருந்த நிலையில், ஆட்சி பொறுப்பேற்று இரு தினங்களில் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த திட்டத்தின் படி, “பயணிகள் பேருந்து, விரைவுப் பேருந்து என தெலங்கானா மாநில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் பெண்கள், திருநங்கைகள் அனைவரும் இலவசமாக பயணிக்கலாம்”.
அதன்படி, அரசுப்பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள், தங்கள் வசிப்பிட அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மென்பொருள் அடிப்படையிலான “மஹா லக்ஷ்மி” என்ற ஸ்மார்ட் கார்டை உருவாக்குவதற்கான திட்டங்களும் நடந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை பதவியேற்ற இரு தினங்களில் நிறைவேற்றியதற்கு அம்மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டம் அம்மாநில பெண்களிடளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.