தமிழக அறநிலையத் துறையின் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அர்ச்சர்களுக்கு ஓய்வூதியத்தொகை 3 ஆயிரமாக ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 36,000 கோயில்களில் இயங்கி வருகிறது. இத்திருக்கோயில்களில் அனைத்து பணிகளும் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் அர்ச்சகராக விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆகம விதிகளின் படி பணி வழங்கப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து தற்போது அர்ச்சகருக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டு கோயில்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அர்ச்சகர்களின் ஓய்வூதியம் ரூ.4,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.