தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை அடுத்துள்ள நந்திகாமா பகுதியில் ஆல்வின் பார்மா என்ற தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 3 அடுக்கு மாடிக் கட்டிடமான ( fire accident ) இந்த நிறுவனத்தில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
சுமார், 300 பேர் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் தீ விபத்து நடந்த நேரத்தில் கட்டிடத்தில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் குறைந்தது இருந்ததாகக் கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்டதும் தரை தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறிய நிலையில், மற்ற தளங்களில் உள்ளவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
சில நொடிகளிலேயே தீ மளமளவெனப் பரவியதால் ஊழியர்கள் வெளியேற முடியாமல் பெரும் கூச்சலிட்டனர்.இந்த சத்தத்தால் அப்பகுதியே போர்க்களமானது. தீ விபத்து ஏற்பட்டபோது அந்த பகுதியைச் சுற்றி இருந்த மக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
Also Read : கொளுத்தும் வெயில் : 19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை..!!
இந்த தீ விபத்தின் காட்சி இருந்த வீடியோவில், வெப்பத்தைத் தாங்க முடியாமல், குறைந்தது நான்கு பேர் கட்டிடத்தின் வழியாகக் குதித்துக் காயமடைந்தனர். மேலும் சில தொழிலாளர்களும் ஒரு ஏணி உதவியுடன் கட்டிடத்திலிருந்து வெளியேற முயன்றனர்.
பெரிய தீப்பிழம்புகள் அதிகப்படியான புகையை ஏற்படுத்தி, கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல்மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது..
இதற்கிடையில், இரண்டு தீயணைப்பு வண்டிகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து வருகின்றன. கட்டிடத்திற்குள் இன்னும் சில தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயின் தீவிரம் அதிகமாக இருந்ததால், நிலைமையைச் சமாளிக்க மேலும் மூன்று தீயணைப்பு வண்டிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
அடர்த்தியான புகை மற்றும் தீப்பிழம்புகள் தங்கள் பணியை மேற்கொள்வதைக் கடினமாக்கிய போதிலும், தீயணைப்பு வீரர்கள் வளாகத்திற்குள் சிக்கியவர்களை மீட்க தங்களின் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடுப்பு நடவடிக்கையை மேற்பார்வையிட்டனர். இதுவரை உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்த ( fire accident ) அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அரசு தரப்பில் உறுதி செய்யப்படவில்லை.